இசையமைப்பாளர் அனிருத் ‘சொர்க்கவாசல்’ படம் குறித்து பேசி உள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் ட்ரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவர் ரஜினி, கமல் ,விஜய், அஜித் என பல ஸ்டார் நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏகப்பட்ட படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் அனிருத். இந்நிலையில் இவர், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அனிருத், “சொர்க்கவாசல் படத்தை பார்த்தேன். என்னுடைய நண்பர்கள் இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படம் ஆர்.ஜே. பாலாஜிக்கு உருமாறும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
“I have watched #Sorgavaasal, I’m very proud that my friends have made a film like this♥️. This will be the Transformation film for RJ Balaji🔥”
– Anirudh pic.twitter.com/Gep4zmnxkL— AmuthaBharathi (@CinemaWithAB) November 23, 2024
ஆர் ஜே. பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதனை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படம் திரில்லர் கதைகளத்தில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.