Homeசெய்திகள்சினிமாஇசை, நடிப்பு என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்... பிறந்தநாள் ஸ்பெஷல்...

இசை, நடிப்பு என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்… பிறந்தநாள் ஸ்பெஷல்…

-

- Advertisement -
kadalkanni
தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இசையில் வெளியான வெயிலோடு விளையாடி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஜய், கார்த்தி, சூர்யா, என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். மேலும், பாடல்களும் பாடி உள்ளார். இசை ஒரு பக்கம் இருக்க, நடிப்பிலும் ஜிவி பிரகாஷ் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மட்டும் குறைந்தபட்சம் 3 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் டியர். ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். கள்வன் திரைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அத்துடன், 13 என்ற திரில்லர் படத்திலும், இடி முழக்கம் படத்திலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி, விக்ரமின் தங்கலான் படத்திற்கும், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்திற்கும், சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கும் இசை அமைத்துள்ளார். தமிழ் மட்டுமன்றி பான் இந்தியா திரைப்படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். அன்று முதல் இன்று வரை ஜிவியின் இசைக்கு நிகர் அவரே. ஆரிரோ ஆராரிரோ, பூக்கள் பூக்கம் தருணம், அன்பே அன்பே, யாத்தே யாத்தே, உள்ளிட்ட பாடல்கள் ஜிவியின் இசையில் வெளியாகி காலத்தால் அழிக்க முடியாமல் ஆணியாய் மக்கள் மனதில் அடிக்கப்பட்டுள்ளது. இசையின் அசுரனாய் வளர்ந்து நிற்கும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ