- Advertisement -
இசை வெளியீட்டு விழா – பாரதிராஜாவுக்கு அழைப்பு
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, இயக்குனர் மணிரத்னம் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மார்ச் 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நடத்திய இசை வெளியீட்டு விழாவை போல பிரம்மாண்டமாக இந்த விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும்படி திரையின் மூத்த முன்னோடிகளை இயக்குனர் மணிரத்னம் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும்படி இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சென்று அழைத்துள்ளார்.