Homeசெய்திகள்சினிமாஅவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே வேணாம்.... விஷால் குறித்து மிஸ்கின்!

அவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே வேணாம்…. விஷால் குறித்து மிஸ்கின்!

-

- Advertisement -

இயக்குனர் மிஸ்கின், விஷாலின் திருமணம் குறித்து பேசி உள்ளார்.அவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே வேணாம்.... விஷால் குறித்து மிஸ்கின்!தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சமீபத்தில் விஷாலுக்கு, நடிகை தன்சிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே வேணாம்.... விஷால் குறித்து மிஸ்கின்!இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஸ்கின், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவரிடம் விஷாலின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மிஸ்கின், “விஷால் என்னுடைய குழந்தை மாதிரி. அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு. அவங்க ரெண்டு பேரும் இணையுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னை அவன் கல்யாணத்துக்கு கூப்பிடவே வேணாம். நான் தள்ளி நின்னு அவனுக்காக கடவுளை வேண்டிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.அவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே வேணாம்.... விஷால் குறித்து மிஸ்கின்!

ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் விஷால் – மிஸ்கின் கூட்டணியில் உருவாக தொடங்கியது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மிஸ்கின் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கி, நடிப்பதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.

MUST READ