நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் தண்டேல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து நாக சைதன்யா, தண்டேல் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் நாக சைதன்யாவின் 23 வது படமாகும். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஏற்கனவே சாய் பல்லவி – நாக சைதன்யா கூட்டணி லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தண்டேல் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தண்டேல் திரைப்படத்தை கார்த்திகேயா 1, கார்த்திகேயா 2 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யா மீனவராக நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தண்டேல் திரைப்படம் வெளியாகும் என படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. எனவே படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.