தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தமிழில் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து தங்களின் திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
அதை தொடர்ந்து சமந்தா ஒரு பக்கமும் நாக சைதன்யா ஒரு பக்கமும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த சோபிதா துளி பாலாவும் காதலித்து வருவதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

தற்போது நாகசரித்தனியா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி மணமகள் மிகப்பெரிய வணிக குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாக சைதன்யாவின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை நாவ சைதன்யா குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


