நடிகர் நாகார்ஜுனா தெலுங்கில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நிலையில் தமிழில் இவர் ரட்சகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தற்போது இவர் தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாகார்ஜுனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதேசமயம் குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சமீபத்தில் நாகார்ஜுனா, தனுஷ் ஆகியோர் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நாகார்ஜுனாவை பார்க்க அருகில் வந்தார். அப்போது நாகார்ஜுனாவின் பாதுகாவலர்கள் மாற்றுத்திறனாளி என்று கூற பார்க்காமல் அவரை பிடித்து தள்ளி விட்டனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் நாகார்ஜுனா இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த ரசிகரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
#Nagarjuna Meet his fan who got pushed by his Bouncer🫂🫶 https://t.co/eIQ37C3y4D
— AmuthaBharathi (@CinemaWithAB) June 26, 2024
அப்போது அந்த மாற்றுத்திறனாளி ரசிகர், நாகார்ஜுனாவிடம் மன்னிப்பு கேட்ட போது, மன்னிப்பு கேட்க வேண்டாம் இது உங்களுடைய தவறு இல்லை என்று கூறி அந்த ரசிகரை கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் நாகார்ஜுனா இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


