நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். தற்போது இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. அதன்படி இவர் கூலி திரைப்படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்திற்கு பின்னர் எட்டு வருடங்கள் கழித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார் நாகார்ஜுனா. இந்நிலையில் கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாகார்ஜுனா தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
#Simon at Vizag for #Coolie 😎😎@iamnagarjuna pic.twitter.com/KLcPvI8ziM
— GNR (@rao_goka) September 10, 2024

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினி, நாகார்ஜுனா தவிர சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா போன்றோரும் நடிக்கின்றனர். மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.