நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் வெப்பம், நான் ஈ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் ஹிட் 3 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் 2025 மே 1 அன்று திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், தசரா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் தி பாரடைஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது நானியின் 33வது படமாகும். இதனை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நானியுடன் இணைந்து சோனாலி குல்கர்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் மோகன் பாபு இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நானியும் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
365 Days/రోజులు.#TheParadise pic.twitter.com/jITmj1Cq9e
— Nani (@NameisNani) March 26, 2025
ஏற்கனவே இந்த படம் 2026 மார்ச் 26 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது படக்குழு இத்திரைப்படம் வெளியாக 365 நாட்கள் இருப்பதை குறிப்பிட்டு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.