Homeசெய்திகள்சினிமாநடிகர் நானியின் 'ஹிட் 3'.... மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நடிகர் நானியின் ‘ஹிட் 3’…. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

நானி நடிக்கும் ஹிட் 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் நானியின் 'ஹிட் 3'.... மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நடிகர் நானி தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அதேசமயம் இவரும் தேர்ந்தெடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கும். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் வெளியானது. நடிகர் நானியின் 'ஹிட் 3'.... மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!அடுத்தது இவர் தி பாரடைஸ் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் ஹிட் 3 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சைலேஷ் கொலனு இயக்க வால் போஸ்டர் சினிமா மற்றும் அன் அனானிமஸ் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14 அன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

MUST READ