Homeசெய்திகள்சினிமாமிஸ்டரி திரில்லரில் நடிக்கும் நரேன்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மிஸ்டரி திரில்லரில் நடிக்கும் நரேன்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நரேன்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!நடிகர் நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நரேனுக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இவர் நடித்த அஞ்சாதே படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம் கொஞ்சம் படங்களில் நடித்துள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இதில் இவர் ஏற்று நடித்த பிஜு கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் இறைவன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது நரையின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை கத்ரிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க சுஜீத் இயக்கியுள்ளார். மிஸ்டரி திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆத்மா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நரேன்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இதனை பட குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்ய மங்கள் சுவர்ணன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நரேன் நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் போல் தெரிகிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ