spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜி நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறாரு.... 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ்!

ஆர்.ஜே. பாலாஜி நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறாரு…. ‘கருப்பு’ படம் குறித்து நட்டி நடராஜ்!

-

- Advertisement -

நடிகர் நட்டி நடராஜ், கருப்பு படம் குறித்து பேசியுள்ளார்.ஆர்.ஜே. பாலாஜி நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறாரு.... 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ்!

சூர்யாவின் 45வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதன் இசையமைப்பாளராகவும், ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறாரு.... 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ்!மேலும் இப்படமானது கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 2026 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் நட்டி நடராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘கருப்பு’ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

அதன்படி அவர், “கருப்பு படம் பிரமாதமாக வந்து கொண்டிருக்கிறது. எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாக அமையும் என நம்புகிறேன். ஏனென்றால் ஆர்.ஜே. பாலாஜி சார் எவ்வளவு சிறப்பாக பண்ண முடியுமோ அவ்வளவு சிறப்பாக பண்ணுகிறார். அவர் இந்த படத்தில் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். நீதிமன்றத்தை ஆபரேட் செய்யும் நடைமுறையை இந்த படத்தில் சொல்லுவாங்க. அதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணி எடுத்துருக்காங்க. இது நல்ல படம். சுவாரஸ்யமான, வித்தியாசமான கதை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ