- Advertisement -
கிட்டத்தட்ட 20-ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றி வரும் நயன்தார், விஜய், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி மற்றும் வளரும் இளம் நாயகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன், கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

இதனிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு, இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது நடிப்பு மட்டுமன்றி, அவ்வப்போது குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் தற்போது நயன்தாரா துபாய் சென்றிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.




