தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்று பெயரிட்டனர். நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இதுவரை குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்தனர். தற்போது குழந்தைகள் பிறந்து ஒரு வருடங்கள் நெருங்க இருக்கும் நிலையில் குழந்தைகளின் முகத்தை வெளிக்காட்டி உள்ளனர். இது சம்பந்தமான வீடியோவை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.