டெஸ்ட் படத்தின் அனுபவத்தை பகிர்ந்த நயன்தாரா
- Advertisement -
டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ள நயன்தாரா, படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவத்தை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. தொடர்ந்து மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா மட்டுமன்றி குடும்பம் மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வரும் நாயகி நயன்தாரா. அவ்வப்போது தன் இரட்டை மகன்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார்.

இதனிடையே, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் டெஸ்ட். இப்படத்தில் நயனுடன் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்ளில் நடிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பாக வௌியானாலும், அண்மையில் தான் படத்திற்கு டெஸ்ட் என தலைப்பு வைத்து முதல் தோற்றத்தை பகிர்ந்தனர். இதில் நடிகை மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். தமிழ்ப்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

பெண் இசையமைப்பாளரான சக்திஸ்ரீ கோபாலன் டெஸ்ட் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ள நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து சக நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். டத்தின் நயனின் கதாபாத்திரத்தின் பெயர் குமுதா எனவும் வெளிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.