spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'.... முக்கிய அறிவிப்பு!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’…. முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'.... முக்கிய அறிவிப்பு!

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி பிசியான நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துவரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்து சில தினங்களுக்கு முன்பாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இயக்குனர் சுந்தர். சி இந்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'.... முக்கிய அறிவிப்பு! இந்நிலையில் நாளை (செப்டம்பர் 16) மாலை 6 மணிக்கு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

we-r-hiring

ஏற்கனவே நடிகை நயன்தாரா, ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ