spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு.... படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நயன்தாரா!

‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு…. படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நயன்தாரா!

-

- Advertisement -

நடிகை நயன்தாராவின் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.'மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு.... படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். அடுத்ததாக நயன்தாரா மண்ணாங்கட்டி Since1960 எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ட்யூட் விக்கி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு பூஜை உடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை நயன்தாரா பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ