ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு முன்னால் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களையும் பார்த்து விடுங்கள்” என்று நெல்சன் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜெயிலர் இன்று 7000 திரைகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் குறித்து நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளார்.
“எனது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நான் இவ்வளவு எமோஷனல் ஆக இருப்பது இந்தப் படத்திற்கு தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சிறு வயது முதலே நான் சூப்பர் ஸ்டாரை மிகவும் விரும்பினேன். எனக்கு இது ஒரு நம்பமுடியாத தருணம்.சூப்பர் ஸ்டாரை கவுரவிக்கும் வகையில் ஒரு படத்தை இயக்குகிறேன் என்பது எனக்கு வாழ்நாள் சாதனை.இதை சாத்தியமாக்கிய கலாநிதி மாறன் சார் மற்றும் என் அன்பான அனிருத்துக்கு நன்றி. நான் ஜெயிலரில் வேலை செய்ய ஆரம்பித்து 18 மாதங்கள் ஆகிறது. ஒரு குழுவாக, நாங்கள் இரத்தம் சிந்தியுள்ளோம். உங்களையும் எங்கள் பார்வையாளர்களையும் மகிழ்விப்பதற்காக. கோலிவுட்டின் பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவரைக் கொண்டாடுங்கள். உங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமை சார். இந்தப் படம் எனது கேரியரில் பெரிய திருப்புமுனையாக இருக்கும். என் வாழ்க்கையில். இந்த படப்பிடிப்பின் போது நடந்த தருணங்களை நான் என்றென்றும் போற்றுவேன்! நீங்கள் படத்தை மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜெயிலர் பார்ப்பதற்கு முன்னர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களையும் பார்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். எனவே நெல்சன் சினிமெடிக் யுனிவர்ஸ் அடுத்ததாக ரெடியாகி வருவதாகத் தெரிகிறது.