தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவர் கடந்த 2018 நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தையும் இயக்கி பெயர் பெற்றார். இவரின் படங்களில் டார்க் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். அதனால் டாக்டர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இரு படங்களின் வெற்றி காரணமாக அடுத்ததாக விஜயை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது. எனவே விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. பீஸ்ட் பட தோல்வியின் விளைவாக நெட்டிசன்கள் பலரும் இவரை ட்ரோல் செய்து வந்தனர். அதன் பின் சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த்துக்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு நெல்சன் அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் நெல்சன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி அடுத்த படத்திற்காக தான் கதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார். எனவே நெல்சன் அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார்? என்ன கதை தயார் செய்து வைத்திருக்கிறார்? ஜெயிலர் படத்தை போல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் நெல்சன் ஜெயிலர் 2 படத்தை இயக்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.