Homeசெய்திகள்சினிமாபல பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய 'நெட்பிளிக்ஸ்'.... 2025 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் அறிவிப்பு!

பல பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ‘நெட்பிளிக்ஸ்’…. 2025 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் அறிவிப்பு!

-

- Advertisement -

நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது.பல பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய 'நெட்பிளிக்ஸ்'.... 2025 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் அறிவிப்பு!

2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வரிசையாக பல பெரிய ஹீரோக்களின் படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக அறிவித்து வருகிறது. அதில் நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் சூர்யாவின் ரெட்ரோ படத்தையும் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இது தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்தவரும் பைசன் திரைப்படத்தையும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்தையும், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடிக்கும் பெருசு திரைப்படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

அடுத்தது துல்கர் சல்மானின் காந்தா படத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் நானியின் ஹிட் 3, நாக சைதன்யாவின் தண்டேல், விஜய் தேவரகொண்டாவின் VD12 போன்ற பல தெலுங்கு படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ