பைசன் திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பைசன். இந்த படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்க பா. ரஞ்சித் தனது நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அற்புதமான படைப்புகளை படைத்த மாரி செல்வராஜின் 5வது படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
மாரி செல்வராஜின் திரைக்கதையும், துருவ் விக்ரமின் நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் வரை அதிக வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரமின் மூன்றாவது படமான இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


