Homeசெய்திகள்சினிமாபேமிலி ஸ்டார் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு

பேமிலி ஸ்டார் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு

-

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குஷி. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பட வசூலில் கிடைத்த பணத்தையும் நடிகர் விஜய் தேவரகொண்டா 100 குடும்பங்களுக்கு பிரித்து வழங்கினார். இப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறித்த தகவல் அண்மையில் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘கீதா கோவிந்தம்’ என்னும் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் விஜய் தேவரகொண்டா பரசுராம் பெட்லா கூட்டணி நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளது. இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான மிர்ணாள் தாகூர் நடிக்கிறார். ‘சீதாராமம்’ திரைப்படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வௌியிட்டுள்ளது. டீசர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

MUST READ