spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் இளையராஜா... புதிய போஸ்டர் ரிலீஸ்...

தனுஷ் நடிக்கும் இளையராஜா… புதிய போஸ்டர் ரிலீஸ்…

-

- Advertisement -
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பயோபிக் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா. சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இன்று வரை இசை அமைத்திருக்கிறார். இன்றும் அவரது இசை அமைப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மொழிகளைத் தாண்டி பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர் இசை அமைப்பு மட்டுமன்றி பல பாடல்களை பாடியும் இருக்கிறார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் விருப்ப பாடல்களில் இளையராஜாவின் இசை நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

we-r-hiring
இசைக்கு ஞானி என்று போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இளையராஜா என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல முன்னணி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி இப்படத்தை இயக்க இருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகவே, இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இளையராஜா படத்திலிருந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ