Homeசெய்திகள்சினிமா'தலைவர் 171' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...... ரஜினியின் கையில் இதை கவனித்தீர்களா?

‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…… ரஜினியின் கையில் இதை கவனித்தீர்களா?

-

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'தலைவர் 171' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...... இதை கவனித்தீர்களா?அதைத் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அதன்படி ரஜினியின் 171 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சாண்டி மாஸ்டர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளனர். அதேசமயம் இந்த படத்தின் டீசரை நாளை படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.  மேலும் ராணா, கழுகு, கடிகாரம், தங்கம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்று தலைவர் 171 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று இணையத்தில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. இந்நிலையில் புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'தலைவர் 171' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு...... இதை கவனித்தீர்களா?இந்த போஸ்டரில் வழக்கம்போல் ரஜினி கையில் அணிந்திருக்கும் காப்பு தலைவர் 171 படத்தின் புதிய போஸ்டரிலும் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதுமே ரஜினி இந்த காப்பை அணிந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ