spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகஸ்டடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

கஸ்டடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

-

- Advertisement -

நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

‘கஸ்டடி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

we-r-hiring

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இன்று யுகாதியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி ஷெட்டியை அணைத்து பிடித்தபடி நாக சைதன்யா நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ