நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று பெயர் பெற்றுள்ளார். மேலும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண் ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ராயன், இட்லி கடை என அடுத்தடுத்த படங்களை தானே இயக்கி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படமானது 2025 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வருவதாலும் விடாமுயற்சி படத்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அறிவித்த தேதிக்கு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதன்படி ஜனவரி 30 ஆம் தேதி இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -