spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமா மதுர பாடலுக்கு மலையரசி போட்ட குத்தாட்டம்... ஜிகர்தண்டா 2 வெற்றி கொண்டாட்டம்...

மா மதுர பாடலுக்கு மலையரசி போட்ட குத்தாட்டம்… ஜிகர்தண்டா 2 வெற்றி கொண்டாட்டம்…

-

- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற வா மதுர பாடலுக்கு, நடிகை நிமிஷா விஜயன் குத்தாட்டம் போடும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் என்னும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிப்பு வௌியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்

1975-ம் கால கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு பீரியாடிக் படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள நடிகை நிமிஷா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் தனது முந்தைய கமர்சியல் படங்களைப் போல் அல்லாமல் ஜிகர்தண்டா டபுள் எக்சில் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
we-r-hiring

படத்தில் மலையரசி என்ற கதாபாத்திரத்தில் நிமிஷா விஜயன் நடித்திருப்பார். அசல் மலைவாழ் பெண் போலவே நடித்த நிமிஷாவுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், படத்தில் இடம் பெற்ற மா மதுர பாடலுக்கு நிமிஷா நடனமாடி வெளியிட்டு காணொலி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், வரும் 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

MUST READ