spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'JR33' குறித்து சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்த நித்யா மேனன்!

ஜெயம் ரவியின் ‘JR33’ குறித்து சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்த நித்யா மேனன்!

-

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சைரன், ஜீனி, பிரதர் , ஜன கன மன உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியானது. சைக்கோ திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதற்கிடையில் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்படி ஜெயம் ரவியின் 33வது படமான இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் JR33 படம் குறித்து நடிகை நித்யா மேனன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், ” JR33 படமானது ஒரு அழகான ரொமான்டிக் காமெடி படம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சோபனாவின் கதாபாத்திரத்தை இதில் அதிகம் காணலாம். இது திருச்சிற்றம்பலம் படத்தைப் போல ஒரு நகர்புற ரொமான்டிக் காதல் கதையாக இருக்கும்” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.

MUST READ