Homeசெய்திகள்சினிமாதேசிய விருது வென்ற நித்யா மேனன்..... 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

தேசிய விருது வென்ற நித்யா மேனன்….. ‘திருச்சிற்றம்பலம்’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

-

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தேசிய விருது வென்ற நித்யா மேனன்..... 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்த இந்த படம் நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில் 70 ஆவது சர்வதேச தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் நடன கலைஞர்களாக பணியாற்றிய ஜானி மற்றும் சதீஷுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி. நித்யா மேனன் சோபனாவாக தேசிய விருது வென்றுள்ளார். ஜானி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பட குழுவுக்கு இன்றைய நாள் சிறந்த நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ