spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகும் நித்யா மேனன்

விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகும் நித்யா மேனன்

-

- Advertisement -
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் டாப் நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும், தமிழிலும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட்டிலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகை நித்யா மேனன் தமிழில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக தமிழில் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் நித்யா. தற்போது ஜெயம்ரவிக்கு ஜோடியாக காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது
இந்நிலையில், மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இருவரும் இணைந்து மலையாளத்தில் 19 (1) (ஏ) என்கிற திரைப்படத்தில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

MUST READ