spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது... ரசிகர்கள் அதிர்ச்சி...

ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது… ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியாகாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'லியோ' படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!
File Photo
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. லலித்குமார் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

லியோ அதிகாலை 4 மணி காட்சி... கர்நாடகா, கேரளாவில் அனுமதி...

இது தவிர, வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச அளவில் லியோ திரைப்படம் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் உள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே நிலையான முடிவு எட்டப்படாததால் இந்த இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

we-r-hiring
இதனிடையே, ரோகிணி திரையரங்கில் முன்பதிவு இல்லை என கூறப்பட்டு வந்தது. நாளை படம் வெளியாக இருப்பதால், இன்று முன்பதிவு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ரோகிணி திரையரங்கம் நோக்கி படையெடுத்தனர். ஆனால், ரோகிணி திரையரங்கில் லியோ படம் திரையிடப்படாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை ரோகிணி திரையரங்கம் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு பிரபலமானது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இத்திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி மாபெரும் கொண்டாட்டத்துடன் தொடங்கும். அந்த வகையில் லியோ முன்னோட்டத்தை காணச் சென்ற ரசிகர்கள், ரோகிணி திரையரங்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் பெரும் பொருட்செலவை சந்தித்துள்ள ரோகிணி திரையரங்கம், லியோ படம் திரையிடப்படாது என தெரிவித்துள்ளது.

MUST READ