Homeசெய்திகள்சினிமாகார்த்திக்காக வில்லனே இல்லாத கதையை தயார் செய்த 96 பட இயக்குனர்!

கார்த்திக்காக வில்லனே இல்லாத கதையை தயார் செய்த 96 பட இயக்குனர்!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் பிரேக்கே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஜப்பான் திரைப்படத்தை முடித்த இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதன்படி இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார். மேலும் நடிகர் ராஜ்கிரணும் இந்த படத்தில் கார்த்தி உடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, இப்படம் வில்லனே இல்லாமல் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது குடும்ப செண்டிமெண்ட் கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாகவும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகள் அவர்களுக்கு வில்லனாக மாறுவது தான் கதை என்று கூறப்படுகிறது. எனவே படம் வித்தியாசமான களத்தில் 96 படத்தை விட சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ