spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு...

அண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு அரசு

-

- Advertisement -

‘முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறும் வகையில் உள்ளது’ என அண்ணா பல்கலைகழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி இல்லை என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு அரசு

அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை உயர் நீதி மன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறகின்றது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அது குறித்து அரசு தரப்பில் கூறியதாவது :

நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம் என்றும் எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று மாணவி வழக்கில் FIR , இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது.

கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக FIR காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகியுள்ளது.

FIR – ல் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூற வேண்டும். போலீஸாரால் கசிய படவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது : முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக FIR உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?

இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பின்பும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. யார்’முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது எ்னறும் பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறும் வகையில் உள்ளது’ என அண்ணா பல்கலைகழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை உயர் நீதி மன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறகின்றது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து அரசு தரப்பில் கூறியதாவது

‘நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம் என்றும் எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று மாணவி வழக்கில் FIR , இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது.

கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக FIR காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகியுள்ளது.

FIR – ல் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூற வேண்டும். போலீஸாரால் கசியபடவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது : முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக FIR உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?

இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. யார் FIR -யை பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்கும் வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!

MUST READ