தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று 900 மேலான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் பல்வேறு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். தனுஷின் மற்ற படங்களை காட்டிலும் கேப்டன் மில்லர் திரைப்படம் தனுசுக்கு மிக முக்கியமான படமாகும். அதே சமயம் மூன்று வருடங்களாக தனுஷ் தாடியுடன் ஒரே கெட்டப்பில் இருந்தார். இப்படம் பீரியாடிக் படமாக உருவாகியுள்ள நிலையில் 3 பாகங்களாக வெளியாக இருக்கிறது. இன்று வெளியாகும் கேப்டன் மில்லர் இரண்டாம் பாகம் என சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தார்.
3 years of sweat, blood and sacrifice from my team to you all. Captain Miller from today 🙏🏻🙏🏻. OM NAMASHIVAYAA ♥️♥️ pic.twitter.com/OtIoE3Dgtv
— Dhanush (@dhanushkraja) January 11, 2024
எனவே இன்று வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படம் எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், ” எங்களின் மூன்று வருட வியர்வை, ரத்தம், தியாகம் ஆகியவற்றை உங்கள் அனைவருக்கும்
சமர்ப்பிக்கிறோம். இன்று முதல் கேப்டன் மில்லர்.. ஓம் நமச்சிவாய” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே பொங்கல் தினத்தில் தனுஷின் தேவதையை கண்டேன், குட்டி, பட்டாஸ் போன்ற படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.