Homeசெய்திகள்சினிமாஆணவக்கொலைக்கு தனி சிறப்பு சட்டம் அவசியம்... இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி...

ஆணவக்கொலைக்கு தனி சிறப்பு சட்டம் அவசியம்… இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி…

-

- Advertisement -
 தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றினார். பீல் குட், விளையாட்டுத்தனமாக திரைப்படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து வெளிவரும் இயக்குநர்கள் விளையாட்டாய் திரைப்படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதை உடைத்து, அட்டகத்தி படத்தில் தலித் அரசியலை பேசியிருப்பார் பா ரஞ்சித்.
அடுத்ததாக இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் சுவற்றை சுற்றி நடக்கும் அரசியலை காட்சிப்படுத்தினார். ரஜினிகாந்தை முழுக்க முழுக்க வயதான தோற்றத்தில் நடிக்க வைத்து புதுமையை புதுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கபாலி படத்தின் கதையை அமைத்தார் பா ரஞ்சித். தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து காலா படத்தையும் இயக்கினார் பா.ரஞ்சித். தற்போது தங்கலான் படத்தை இவர் இயக்கி முடித்திருக்கிறார். இது விரைவில் திரைக்க வரவுள்ளது. சினிமா மட்டுமன்றி சமூக பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர் இயக்குநர் பா ரஞ்சித்.
இந்நிலையில், விருதுநகரில் பட்டியலின இளைஞர் அழகேந்திரனின் தலையை துண்டித்து ஆணவக் கொலை செய்ததற்கு இயக்குநர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை கொலை செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என இயக்குநர் பா ரஞ்சித் கேட்டுக்கொண்டார். மேலும், இது போன்ற கொடூரமான செயலைத் தடுக்க தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ