தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றினார். பீல் குட், விளையாட்டுத்தனமாக திரைப்படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து வெளிவரும் இயக்குநர்கள் விளையாட்டாய் திரைப்படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதை உடைத்து, அட்டகத்தி படத்தில் தலித் அரசியலை பேசியிருப்பார் பா ரஞ்சித்.
அடுத்ததாக இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் சுவற்றை சுற்றி நடக்கும் அரசியலை காட்சிப்படுத்தினார். ரஜினிகாந்தை முழுக்க முழுக்க வயதான தோற்றத்தில் நடிக்க வைத்து புதுமையை புதுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கபாலி படத்தின் கதையை அமைத்தார் பா ரஞ்சித். தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து காலா படத்தையும் இயக்கினார் பா.ரஞ்சித். தற்போது தங்கலான் படத்தை இவர் இயக்கி முடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகிறது
அண்மையில் இந்தியில் பா.ரஞ்சித் படம் இயக்க உள்ளாத தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பா.ரஞ்சித், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் இந்தியில் படம் இயக்குவது உண்மை தான் என்றும், ஆனால், நாயகன் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.