பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படமானது கடந்த 1965-இல் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். வில்லனாக ரவி மோகன் நடித்துள்ள நிலையில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும் ரவி கே. சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேசமயம் படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
One of my career best songs coming from #parasakthi as second single 😍 … excitedddd #GV100 …. Soooooooonnnn
— G.V.Prakash Kumar (@gvprakash) November 19, 2025

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “என்னுடைய கேரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கும் 100வது படம் இது என்பதால் இந்த படத்தில் இவர் தரமான இசையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.


