spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிரில்லராக உருவாகும் பார்த்திபன் இயக்கும் 'டீன்ஸ்'..... டைட்டில் லுக் வெளியீடு!

திரில்லராக உருவாகும் பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’….. டைட்டில் லுக் வெளியீடு!

-

- Advertisement -

திரில்லராக உருவாகும் பார்த்திபன் 'இயக்கும்' டீன்ஸ்..... டைட்டில் லுக் வெளியீடு!பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாள்பவர். அந்த வகையில் இவர் இயக்கத்தின் நடித்த புதியபாதை, இவன், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களாகவும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையிலும் அமைந்திருந்தது. கடைசியாக நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் எனும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். குடிசைகளில் வாழும் ஏழை எளிய சிறுவர்களின் வாழ்வியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு டீன்ஸ் என்று தலைபிடப்பட்டுள்ளது . இந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் மூலம் இப்படம் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் விரைவில் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த படத்தை அகிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கு காவமிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ