Homeசெய்திகள்சினிமாதனுஷுக்கு கிஃப்ட் கொடுத்த பார்த்திபன்.... வைரலாகும் வீடியோ!

தனுஷுக்கு கிஃப்ட் கொடுத்த பார்த்திபன்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் பார்த்திபன், தனுஷுக்கு கிஃப்ட் கொடுத்துள்ளார்.தனுஷுக்கு கிஃப்ட் கொடுத்த பார்த்திபன்.... வைரலாகும் வீடியோ!

தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இவர், இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனும், ‘அறிவு’ என்ற கதாபாத்திரத்தில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்திருக்கிறார். தனுஷுக்கு கிஃப்ட் கொடுத்த பார்த்திபன்.... வைரலாகும் வீடியோ!இந்நிலையில் நடிகர் பார்த்திபன், ‘இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் தனுஷுக்கு கிஃப்ட் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ” ‘Mischievous’ பார்த்திபன் Missssschivous Mr. தனுஷிடமிருந்து ஒரு பட்டம்.. குறும்பு அரும்புவதே விரும்பும் போதும் அல்லது விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாதபாடு படுகிறேன்.’இட்லி கடை’- யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்.

we-r-hiring

Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம் கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக. அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்!குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர். அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்…. It tally with a tale of ‘Italy shop’ by Danish” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ