spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் இருந்தா யாருக்கும் தேசிய விருது கிடைக்காது.... 'இட்லி கடை' விழாவில் பார்த்திபன்!

தனுஷ் இருந்தா யாருக்கும் தேசிய விருது கிடைக்காது…. ‘இட்லி கடை’ விழாவில் பார்த்திபன்!

-

- Advertisement -

நடிகர் பார்த்திபன் இட்லி கடை பட விழாவில் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.தனுஷ் இருந்தா யாருக்கும் தேசிய விருது கிடைக்காது.... 'இட்லி கடை' விழாவில் பார்த்திபன்!

தனுஷின் 52 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்திருக்கிறார். ‘ராயன்’ படத்திற்கு பிறகு இவர், நல்ல ஒரு பீல் குட் படத்தை கையில் எடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தனுஷ் இருந்தா யாருக்கும் தேசிய விருது கிடைக்காது.... 'இட்லி கடை' விழாவில் பார்த்திபன்!இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் மதுரையில் பிரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், அருண் விஜய், பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பார்த்திபன், தனுஷ் குறித்து பேசி உள்ளார்.தனுஷ் இருந்தா யாருக்கும் தேசிய விருது கிடைக்காது.... 'இட்லி கடை' விழாவில் பார்த்திபன்! அதன்படி அவர், “தனுஷ் படம் தேசிய விருது பட்டியலில் இல்லாத போது தான் அந்த விருது மற்றவர்களுக்கு கிடைக்கும். இவரோட படம் அங்க போச்சுன்னா வேற யாருக்கும் தேசிய விருது கிடைக்காது. ஒன்னு இவருக்கு கிடைக்கும். இல்லையென்றால் இவருடன் பணியாற்றுபவர்களுக்கு கிடைக்கும். இந்த முறை இவருடைய ‘வாத்தி’ படத்தில் வேலை செய்த ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு நம் பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ