spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபார்த்திபன் மரணம்?.... அதிர்ச்சியடைந்து அவரே வெளியிட்ட பதிவு!

பார்த்திபன் மரணம்?…. அதிர்ச்சியடைந்து அவரே வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.பார்த்திபன் மரணம்?.... அதிர்ச்சியடைந்து அவரே வெளியிட்ட பதிவு!

தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாளக் கூடியவர் பார்த்திபன். அந்த வகையில் இவர் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர நான் தான் CM எனும் அரசியல் படத்தையும் தானே இயக்கி, நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. படத்தில் இவருடைய கதாபாத்திரம், கட்சி, சின்னம் போன்றவை சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் அதற்கு விளக்கமும் கொடுத்து பதிவு வெளியிட்டிருந்தார் பார்த்திபன். இந்நிலையில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது யூடியூப் சேனல்களில் பிரபல நடிகர்கள் உயிரிழந்துவிட்டதாக பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்திபனும் மறைந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பாக காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

we-r-hiring

அதன்படி பார்த்திபன் வெளியிட்ட பதிவில், “இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ