தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாளக் கூடியவர் பார்த்திபன். நடிகரும், இயக்குனருமான இவர், தற்போது அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை தானே இயக்கி, நடிக்கிறார்.
இந்த படத்திற்கு நான் தான் CM என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் பார்த்திபன், சிங்காரவேலன் என்ற கேரக்டரில் CM பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக நடிக்கிறார். படத்தில் போட் என்ற சின்னத்தில் தான் போட்டியிடுவதாகவும், தன்னுடைய கட்சி சோத்துக் கட்சி என்றும் தெரிவித்திருந்தார் பார்த்திபன். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பார்த்திபனின் கதாபாத்திரமும், அவருடைய சின்னம், கட்சி போன்றவையும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பார்த்திபன் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள் ஆள்/ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட கற்புள்ள கற்பனை பெயர்களே! CM பக்கத்தில் rhyming ஆக’ சி’ இருக்க வேண்டுமென(மெனக்கெடாமல்)வைத்த பெயரே சிங்காரவேலன். ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன்/மதிக்கிறேன் கவனத்தில் இட்டதற்கு! Boat-ம் அப்படியே தடாலடியாக அதை கவிழ்த்து வேறு சின்னம் வைத்துக் கொள்ளலாம்,ஆனால் இப்படம் மீனவ சமுதாயப் படமல்ல.
மதியவேளை வணக்கம்!
c dis interesting interview https://t.co/oLBqqqWPzB பயமில்லை-ஆனால்
பயனில்லை!
ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள்
ஆள்/ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட
கற்புள்ள கற்பனை பெயர்களே!
CM பக்கத்தில் rhyming ஆக’ சி’ இருக்க வேண்டுமென(மெனக்கெடாமல்)வைத்த பெயரே
சிங்காரவேலன்.… pic.twitter.com/CQfoUFTeGM— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 18, 2025
‘சோத்துக் கட்சி ‘ என்பது கால் நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்த திரு சோ அவர்கள் தலைமையில் 1000 பேருக்கு 10 கிலோ அரிசி கொடுத்துத் துவங்கப் பட்டது.அந்த ‘சோ’த்துக் கட்சி பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை. இல்லாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அவசிய அரசியல். அதை என் எல்லா படங்களும் பேசும்.இப்போது இப்படமும். அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. முற்றுகை போராட்டம் போன்ற அநாவசிய/வசிய விளம்பரங்கள் என் படத்திற்கு தேவையல்லை. மீனவ நண்பர்களை மட்டுமல்ல யார் மனதையும் இந்த CM சீர் கெட செய்ய மாட்டான் என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


