spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் காதல் காவியத் திரைப்படம் 'அழகி'!

மீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் காதல் காவியத் திரைப்படம் ‘அழகி’!

-

- Advertisement -

சமீபத்தில் ரசிகர்களிடையே ரீ ரிலீஸ் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பல படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றி அடைந்துள்ளன.மீண்டும் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் காதல் காவியத் திரைப்படம் 'அழகி'! பெரும்பாலும் மாஸ் ஆக்சன் திரைப்படங்கள் தான் ரீ ரிலீஸ் இல் பட்டையை கிளப்பி வரும் நிலையில் ஒரு சில காதல் திரைப்படங்களும் மாபெரும் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் பார்த்திபனின் அழகி திரைப்படம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பில் வெளியான அழகி திரைப்படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகின. மறைந்த பாடகி பவதாரிணி பாடியிருந்த ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்னும் பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இந்நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அழகி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

இந்த செய்தியை படத்தின் கதாநாயகன் பார்த்திபன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இப்படமானது மார்ச் 29 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 22 வருஷங்களுக்கு பிறகு அழகியை பார்க்கப் போகிறேன் என் மனசுக்குள் இருக்கிற ஆசை யாருக்கு புரியும் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ