தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் இவருடைய குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்திருந்தது. அடுத்ததாக நடிகர் பார்த்திபன் டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பார்த்திபன் இயக்கும் 16 வது படமாகும். இந்த படமானது சிறுவர்களை மையமாக வைத்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் ரசித்தா நாசிர், ரிஷி ரத்தினவேல், தீபிஸ்வரன், அஸ்மிதா மகாதேவன், கிருத்திகா பாலசுப்பிரமணியன், ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அஜிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. காவமிக் ஆரி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 12 இல் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -