நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தங்கலான் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது
இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள தங்கலான் திரைப்படம் ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை பார்வதியின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” நான் எங்கு சென்றாலும், என்னுடைய ஒவ்வொரு திருப்பத்திலும், இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்காக நான் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் உண்மை மட்டுமே இருந்தன, போலித்தனத்தின் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஒரு நடிகைக்கு அதுதான் மிகமுக்கியம்.
எனது நெருங்கிய நண்பர் சமீபத்தில் இந்த மேற்கோளை எனக்கு அனுப்பினார. நான் தங்கலான் படத்தில் நடித்த அனுபவத்தை சொல்ல இதைவிட பொருத்தமான வார்த்தைகள் இருக்கமுடியாது. அன்பை விட, பணத்தை விட, புகழைக் காட்டிலும் எனக்கு உண்மையே மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.