Homeசெய்திகள்சினிமாகேரளத்தில் வாக்குப்பதிவு தீவிரம்... நடிகை பார்வதி மக்களுக்கு வேண்டுகோள்...

கேரளத்தில் வாக்குப்பதிவு தீவிரம்… நடிகை பார்வதி மக்களுக்கு வேண்டுகோள்…

-

- Advertisement -
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. இவர், பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் மலையாளத்தில் பல சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான உயரே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூக பிரச்னைகள் என அனைத்துக்கும் பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறாார். இறுதியாக அவரது நடிப்பில் தூதா, கடக் சிங் ஆகிய இணைய தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கேரளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை பார்வதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், வெறுப்புக்கு எதிராகவும், வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் , மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

MUST READ