spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபசுபதியின் தண்டட்டி.... படம் எப்படி இருக்கு?

பசுபதியின் தண்டட்டி…. படம் எப்படி இருக்கு?

-

- Advertisement -

பசுபதி நடித்துள்ள தண்டட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை ராம் சங்கையா இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகிணி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்தின் மண் வளம் மாறாத வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் பசுபதி காவல் அதிகாரியாகவும் ரோகிணி வயதான மூதாட்டியாகவும் நடித்துள்ளார்.
மேலும் சிறு வயது ரோகினியாக அம்மு அபிராமி நடித்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் கதை ஆனது தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டி என்னும் கிராமத்தில் தங்க பொண்ணு (ரோகினி) வாழ்ந்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர். திடீரென்று ஒரு நாள் ரோகினி காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடிக்கும்படி சுப்பிரமணியிடம் (பசுபதி) புகார் வருகிறது. பசுபதி ரோகினையை தேடிச் செல்கிறார். பின் ஒரு கட்டத்தில் ரோகினி இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார்.

அதன் பிறகு ரோகினிக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. அப்போது ரோகிணியின் காதில் இருக்கும் தண்டட்டியை அவரது பிள்ளைகள் கைப்பற்ற நினைக்கிறார்கள்.
திடீரென்று அந்த தண்டட்டி காணாமல் போகிறது. இறுதியில் தண்டட்டி கிடைத்ததா ரோகிணியின் இறுதி சடங்கு நடந்ததா என்பதே இப்படத்தின் கதை ஆகும்.

இந்த படத்தில் பசுபதி கதாபாத்திரத்தின் நடிப்பு இந்த படத்தை படத்தை இறுதிவரை தாங்கி செல்கிறது.
ரோகினி தனக்கான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அம்மு அபிராமி மற்றும் குடிகார மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா இருவரும் தேவைக்கேற்ற நடிப்பை தந்துள்ளனர்.

முதல் பாதி சற்று மெதுவாகவே செல்கிறது. இரண்டாம் பாதியில் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் காமெடி இப்படத்திற்கு வழு சேர்த்துள்ளது. இதற்கு இடையில் காண்பிக்கப்படும் காதல் கதைகள் மேலும் இப்படத்திற்கு பலமளிக்கிறது.
இயக்குனர் ராம் சங்கையா, காமெடி கலந்த சலிப்பில்லாத கதையுடன் முற்றிலும் பொழுதுபோக்கு படமாக இதனை கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் தண்டட்டியின் பின்னணி கதையை எதார்த்தமாகவும் அழகாகவும் கூறி இருக்கிறார்.

MUST READ