பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தனுஷின் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் பவிஷ். இவர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் பவிஷ். இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்க நாக துர்கா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை சினிமா மீடியா நிறுவனமும், க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு லவ் ஓ லவ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
#LoveOhLove : Title of @Pavishvofficial‘s next 💕 #LOL – A breezy romantic entertainer ❤️ @CreativeEnt4 @dhananjayang @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG @srikanth_nb @Harshika_Ramesh @Dstudiospost @ddstudiossocial @ProRekha @digitallynow pic.twitter.com/C3IMKz0bDF
— Zinema Media (@Zinema_media) November 12, 2025

இது தொடர்பான ப்ரோமோவில் காதலுக்கு மரியாதை, குஷி, அலைபாயுதே, காதல் கொண்டேன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஓ காதல் கண்மணி, லவ் டுடே போன்ற படங்களின் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் காதல் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவது போல் தெரிகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


