spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபவன் கல்யாண் படம் ரி ரிலீஸ்... திரையரங்கில் தீ வைத்த ரசிகர்கள்...

பவன் கல்யாண் படம் ரி ரிலீஸ்… திரையரங்கில் தீ வைத்த ரசிகர்கள்…

-

- Advertisement -
பெரிய நடிகர்களின் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வது புதிதல்ல. சமூக வலைதளங்களில் பெரிய ஸ்டார் நடிகர்கள், ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வசைபாடி மீம்ஸ் வெளியிட்டு தங்களது வெறுப்பை மற்ற நடிகரின் மீது காண்பித்து வருகின்றனர். சில சமயங்களில் இது அரசியல் தலைவர்கள் பக்கமும் திரும்பும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும், அதே சமயம் அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் பவன் கல்யாண். இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் கூட. பவன் கல்யாண் நடிப்பில் கங்கோதா ராம்பாபு கடந்த 2012ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இத்திரைப்படம் ஆந்திராவில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திராவில் உள்ள திரையரங்குகளிலும் இத்திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. பாடல்கள் பாடி நடனமாடி பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உற்சாகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள், கிழித்து போடப்பட்ட காகிதங்களை திரையரங்கில் ஒன்று சேர்த்து வைத்து தீ வைத்து கொளுத்தியிருக்கின்றனர். திரையரங்கில் தீ வைத்து ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து திரையரங்கில் இருந்த ரசிகர்களை ஊழியர்கள் வெளியேற்றினர்.

MUST READ