பெருசு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா ஆகிய படங்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வைபவ். அதை தொடர்ந்து இவர் பல படங்களை ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்திருந்த திரைப்படம் தான் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து சுனில் ரெட்டி, சாந்தினி தமிழரசன், நிஹாரிஹா, கருணாகரன், பால சரவணன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர். சத்ய திலகம் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அருள்ராஜ் இதற்கு இசையமைத்திருந்தார். அடல்ட் காமெடியில் இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த மார்ச் 14ஆஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னுடைய இந்த படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.